சா/த பரீட்சை தொடர்பில் 3 மோசடி சம்பவங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

சா/த பரீட்சை தொடர்பில் 3 மோசடி சம்பவங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

சா/த பரீட்சை தொடர்பில் 3 மோசடி சம்பவங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2023 | 8:48 am

Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான 3 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

பிபிலை – வெல்லஸ்ஸ பகுதியிலுள்ள பரீட்சை மத்திய நிலையமொன்றில் பரீட்சார்த்தி ஒருவர் கணித பாட வினாப்பத்திரத்தை ஆசிரியருக்கு அனுப்பி WHATSAPP ஊடாக விடைகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹேனேகம பகுதியிலுள்ள பரீட்சை மத்திய நிலையமொன்றில் இரு பரீட்சார்த்திகள் கணித வினாப்பத்திரத்தை திறன்பேசியூடாக ஆசிரியர்களுக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தமை பரீட்சை கண்காணிப்பாளரினால் கண்டறியப்பட்டுள்ளது. 

சீதுவை பகுதியில் 5 பரீட்சார்த்திகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக கணித வினாப்பத்திரத்தை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடைகளை பெற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், முறைகேடுகளுடன் தொடர்புடைய பரீட்சார்த்திகள் மற்றும் அதற்கு உதவிய ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்