English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jun, 2023 | 7:22 pm
Colombo (News 1st) ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பாக அமைச்சரவை உப குழு முன்வைத்துள்ள யோசனைகள் அடங்கிய சட்டமூலம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார குறிப்பிட்டார்.
ஊடக நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அமைச்சரவை உப குழு உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
குறித்த யோசனை தொடர்பில் ஏற்கனவே ஆங்கில பிரதி மாத்திரம் வௌியிடப்பட்டுள்ளதால், அடுத்த வாரத்தில் யோசனைகள் அடங்கிய ஆவணத்தின் சிங்கள பிரதியை ஊடக நிறுவனங்களிடம் வழங்க அமைச்சரவை உப குழு இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள யோசனைகளில் திருத்தம் மேற்கொண்டு சமர்ப்பிக்கவுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார கூறினார்.
மூன்று வாரங்களில் இலத்திரனியல் ஔிபரப்பாளர்கள் சங்கமும் ஊடக நிறுவனங்களும் முன்வைக்கும் யோசனைகள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை உப குழு எதிர்ப்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடர்பிலான ஆவணம் குறித்து ஊடக நிறுவன பிரதிநிதிகள் இன்று எதிர்க்கட்சி ஒன்றியத்துடனும் கலந்துரையாடினர்.
முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மாற்று யோசனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஔிரப்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தொடர்பான ஆவணத்தின் பாரதூரத்தன்மை தொடர்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
எழுத்தாளர் Staff Writer
07 Jun, 2023 | 7:06 am
Colombo (News 1st) உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதிநிதிகளின் கருத்துகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று(07) பிற்பகல் 2 மணிக்கு இதற்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தை தயாரித்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களான கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ, கலாநிதி பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நாடளாவிய ரீதியில் அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவன பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இலத்திரனியல் ஊடக பிரதிநிதிகள் முன்வைக்கும் திருத்தங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படுமென வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட மேலும் குறிப்பிட்டுள்ளார்.
21 Sep, 2023 | 07:38 PM
21 Sep, 2023 | 05:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS