பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களுக்கு பொதுஜன பெரமுனவினர் சிலர் நியமனம்

பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களுக்கு பொதுஜன பெரமுனவினர் சிலர் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

06 Jun, 2023 | 6:43 pm

Colombo (News 1st) பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க, தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சட்டத்தரணி மதுர விதானகேவும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு கலாநிதி சரத் வீரசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கோகிலா குணவர்தன இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

சுற்றாடல், இயற்கை வளங்கள், நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஜயந்த கெட்டகொடவும், வெளிநாட்டுத் தொழில்கள், உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்றுவதற்காக காமினி லொக்குகேயும், சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முதிதா பிரஷாந்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்