டயானா கமகேவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டயானா கமகேவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2023 | 6:50 pm

Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்த குறித்த மனு தொடர்பிலான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது.

எனினும்,  இந்த மனு மீதான தீர்ப்பை ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, நீதிபதி A.மரிக்கார் ஆகியோர் தீர்மானித்தனர்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே  பிரித்தானிய பிரஜா உரிமையை கொண்டுள்ளமையினால், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக  பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்