.webp)
Colombo (News 1st) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - மருதங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் விசாரணைப் பிரிவு உறுப்பினர்களுடன் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் இன்று (06) விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதனையடுத்து, நீதிமன்றத்தினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.