உதிரிப்பாகங்கள் என்ற பெயரில் 35 கோடி ரூபா பெறுமதியான 3 சொகுசு கார்கள் இறக்குமதி

உதிரிப்பாகங்கள் என்ற பெயரில் 35 கோடி ரூபா பெறுமதியான 3 சொகுசு கார்கள் இறக்குமதி

உதிரிப்பாகங்கள் என்ற பெயரில் 35 கோடி ரூபா பெறுமதியான 3 சொகுசு கார்கள் இறக்குமதி

எழுத்தாளர் Bella Dalima

06 Jun, 2023 | 6:27 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான 03 சொகுசு கார்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சுங்கத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

03 சொகுசு கார்களும் வெவ்வேறு பாகங்களாக கொண்டுவரப்பட்டுள்ளன. 

சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை பரிசோதித்த போதே சுங்க அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.

துபாயிலிருந்து வாகன உதிரிப்பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவே சுங்க திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மற்றும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், வௌிநாட்டு மதுபானங்கள், ஒலிவ் எண்ணெய், வௌிநாட்டு சிகரட்டுகள் என்பனவும் குறித்த கொள்கலனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை – (ச்)செத்தம் வீதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் பெயரிலேயே கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்