.webp)
Colombo (News 1st) எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் தமது சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாட்டின் 12 மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.