ஆப்கானுடனான 2ஆவது ஒருநாள் போட்டி: இலங்கை வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி

by Staff Writer 04-06-2023 | 5:39 PM

Colombo (News 1st) ஆப்கானிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 132 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை சார்பில் Kusal Mendis 52 ஓட்டங்களையும் Dimuth Karunaratne 52 ஓட்டங்களையும் Pathum Nissanka 43 ஓட்டங்களையும் Sadeera Samarawickrama 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த நிலையில் 324 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Ibrahim Zadran 54 ஓட்டங்களையும் ஹஸ்மதுல்லா ஷஹாடி 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

Dhananjaya de Silva, Wanindu Hasaranga ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் Dushmantha Chameera 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன.

தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.