லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று(04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

by Chandrasekaram Chandravadani 04-06-2023 | 1:41 PM

Colombo (News 1st) இன்று(04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

05 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 181 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. (புதிய விலை 1,281 ரூபா) 

2.3 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 83 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. (புதிய விலை 598 ரூபா)