லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது

லிட்ரோ எரிவாயு விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது

by Bella Dalima 03-06-2023 | 2:53 PM

Colombo (News 1st) சமையல் எரிவாயு விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 300 ரூபாவிற்கும் அதிக தொகையால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். 

5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயுவின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன. 

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வௌியிடப்படுமென லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.