போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

by Bella Dalima 03-06-2023 | 5:33 PM

Colombo (News 1st) நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

1 இலட்சம் மெட்ரிக் தொன் டீசலும் 50,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார். 

அத்துடன், பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார். 

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென அவர் உறுதியளித்தார். 

இதனிடையே, இன்றும் நாளையும் விடுமுறை தினங்களாக இருக்கின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.