இரும்பு உற்பத்திகளுக்கு SLS தரச்சான்றிதழ் கட்டாயம்

இரும்பு உற்பத்திகளுக்கு SLS தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது: நளின் பெர்னாண்டோ

by Bella Dalima 03-06-2023 | 3:42 PM

Colombo (News 1st) இரும்பு உற்பத்திகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

SLS தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியாத இரும்பு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடார். 

SLS தரச்சான்றிதழ் பெறப்படாத நிறுவனங்கள் இரும்புக் கம்பிகளை உற்பத்தி செய்து வருவதாக முறைப்பாடு கிடைத்ததாகவும் 
அதன் அடிப்படையில், குறித்த தரப்பினரை அழைத்து கலந்துரையாடியதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். 

SLS தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் தொடர்பில் SLS நிறுவனத்திற்கு அறிவித்து அந்த நிறுவனங்களின் தொழிற்சாலை செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

கட்டுமானத்துறையுடன் தொடர்புடைய பொருட்கள் தொடர்பில் உரிய தரத்தைப் பேண வேண்டிய தேவை உள்ளதாகவும் 
இதன் காரணமாக இரும்பு உற்பத்திகளுக்கு SLS தரச்சான்றிதழை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.