'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடிய இராணுவ வீரர்கள்

'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடிய உக்ரைன் இராணுவ வீரர்கள் (Video)

by Bella Dalima 03-06-2023 | 4:30 PM

Ukraine: இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்து ஆஸ்கர் விருதையும் சுவீகரித்தது. 

படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ராம்சரண்-ஜுனியர் NTR போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். 

இந்நிலையில், தற்போது உக்ரைன் இராணுவ வீரர்கள் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஏற்கனவே 'நாட்டு நாட்டு' பாடல் உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky-இன் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது. 

அதன்பிறகு சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.