சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை பரிசோதிக்க ஆய்வு

5 வயதிற்கு குறைந்த சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை பரிசோதிக்க ஆய்வு

by Staff Writer 02-06-2023 | 12:59 PM

5 வயதிற்கும் குறைந்த சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை பரிசோதிக்க நாடளாவிய ரீதியில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய விசேட நிபுணர் சித்ரமாலி டி சில்வா கூறினார். 

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களின் மூலம் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 

கடந்த வருட ஆய்வுகளுக்கமைய, 5 வயதிற்கு குறைந்த பிள்ளைகளில் 15.3 வீதமானோர் நிர்ணய எடையை விட குறைந்த எடையுடையவர்கள் என கண்டறியப்பட்டது. 

பாடசாலை சிறார்களின் போசாக்கு நிலை குறித்தும் ஆராயப்படவுள்ளது.