இலங்கை விஜயம் தொடர்பில் கென்ஜி ஒகமுரா அறிக்கை

இலங்கை அதிகாரிகள் மக்களின் வலுவான தீர்மானங்களின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும்: கென்ஜி ஒகமுரா

by Bella Dalima 02-06-2023 | 7:18 PM

Colombo (News 1st) இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். 
  
தனது விஜயத்தின் போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள எட்டுவதற்கான நிதி நடவடிக்கைகள்,  வருமான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

உரிய நேரத்திலும் வெளிப்படைத்தன்மையுடனும் கடனைப் பெறுவதற்கான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுமாறு இலங்கை அதிகாரிகளை தான் ஊக்குவித்ததாக கென்ஜி ஒகமுரா கூறியுள்ளார். 

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், நிர்வாகத்தை வலுப்படுத்தல்,  பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் பொருளாதார மறுசீரமைப்பின் நோக்கம் என   கென்ஜி ஒகமுரா சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னரை விட, இலங்கை அதிகாரிகள் இலங்கை மக்களின் வலுவான தீர்மானங்களின்  கீழ் பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.