பாகிஸ்தானில் பணவீக்கம் 38% ஆக உயர்வு

பாகிஸ்தானில் எப்போதும் இல்லாத வகையில் பணவீக்கம் 38% ஆக உயர்வு

by Bella Dalima 02-06-2023 | 4:54 PM

Pakistan: பாகிஸ்தானில் எப்போதும் இல்லாத வகையில், நுகர்வோர் விலைச்சுட்டெண் பட்டியல் 38% என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. 

அதன் காரணமாக அங்கு உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து  கட்டணம்  என வாழ்க்கைச் செலவு பெருமளவு உயர்ந்துள்ளது. 
 
பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 36.4% பணவீக்கம் பதிவாகியிருந்தது. எனினும், ஒரே மாதத்தில்  1.6% உயர்ந்து  38% ஆக பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 இல் பொருட்கள் மீதான விலை கிராமப்புறங்களில் 52.4 % என்ற அளவிலும், நகர்ப்புறங்களில் 48.1% என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. 

எனினும், நடப்பு ஜூனில் இது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச நாணய நிதியத்திற்கு தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயற்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது.

ஏனைய செய்திகள்