50% குறைந்தபட்ச கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை

by Bella Dalima 01-06-2023 | 6:15 PM

Colombo (News 1st) 50% குறைந்தபட்ச கையிருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துமாறு பணிப்புரை  

நேற்று (31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையை அவதானிக்க முடிந்தது. 

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் போதுமான அளவு எரிபொருள் உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என குழப்பமடைய வேண்டாம் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று மாலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்  எரிபொருளை முன்பதிவு  செய்யாததால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 

குறைந்தபட்ச கையிருப்பை 50 வீதமாக பராமரிக்கத் தவறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப் பத்திரத்தை மீள்பரிசீலனை செய்து இடைநிறுத்துமாறு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.