.webp)
Colombo (News 1st) லங்கா சதொசவில் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 210 ரூபாவாகும்.
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 14 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு, 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சிவப்பு பருப்பு 11 ரூபாவால் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 314 ரூபாவாகும்.
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் வௌ்ளை சீனி ஒரு கிலோ 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
கடலை 5 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு, 545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் வௌ்ளை நாட்டரிசியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.