.webp)
Colombo (News 1st) பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் தண்டனை நிலுவையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபராதம் உட்பட 40 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகளின் தண்டனையையும் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
18 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் தண்டனை 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வுக் காலத்தில் அரைவாசி அல்லது அதற்கு மேல் சேவையாற்றிய கைதிகளின் எஞ்சிய புனர்வாழ்வுக் காலத்தை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.