விமல் வீரவன்சவிற்கு ஜெனரல் சவேந்திர சில்வா கடிதம்

விமல் வீரவன்சவிற்கு ஜெனரல் சவேந்திர சில்வா கடிதம்; பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிப்பு

by Bella Dalima 01-06-2023 | 9:05 PM

Colombo (News 1st) பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அண்மையில் நூல் வெளியீட்டு விழாவில் இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முழு இராணுவத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் முன்வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெனரல் சவேந்திர சில்வா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.