English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Jun, 2023 | 8:31 am
Colombo (News 1st) ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் உள்ளிட்ட அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தை ஆராய பேராசிரியர் சரித்த ஹேரத் தலைமையில் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதன் ஏனைய உறுப்பினர்களாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், கயந்த கருணாதிலக்க, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை இந்த குழு சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்ததன் பின்னர், ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பான எதிர்க்கட்சி கூட்டணியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக பேராசிரியர் G.L.பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி சட்டமூலத்தை ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எரான் விக்ரமரத்ன தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
21 Sep, 2023 | 07:38 PM
21 Sep, 2023 | 05:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS