.webp)
Colombo (News 1st) இறந்த பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழிகளின் கொழுப்பானது ஜெட்களுக்கு எரிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால், அதன் மூலம் ஏற்படும் கார்பன் உமிழ்வானது பூமியை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
விலங்குகளின் கொழுப்பு கழிவுகளாக கருதப்படுகின்ற காரணத்தினால் அவற்றினால் உருவாக்கப்படும் விமான எரிபொருள் குறைந்த கார்பன் தடத்தைக் கொண்டிருக்கும் (carbon footprint) என கருதப்படுகிறது.
2030 ஆம் ஆண்டளவில் விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கான கேள்வி மூன்று மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விமானங்களின் இயந்திரங்களில் புதைபடிவ அடிப்படையிலான மண்ணெண்ணையை எரிப்பதால் வரும் பெரும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டிய அழுத்தத்தில் விமான நிறுவனங்கள் உள்ளன.
ஆனால் பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல், சுத்தமான போக்குவரத்து பிரசாரக் குழுவின் ஆய்வில், விலங்குகளின் கொழுப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுதோறும் போதுமான அளவில் விலங்குகள் கொல்லப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் தயாரிப்பிற்காக விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றமை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால், பல நூற்றாண்டு காலமாக மெழுகுவர்த்தி, சவர்க்காரம் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்திக்காக பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
கடந்த 20 வருடங்களாக விலங்குக் கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையால் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட பயோடீசல் (BioDieseL) பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஜெட்களின் பாவனைக்காக விலங்கு கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் எரிபொருள் மீது பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன.
பாரிஸிலிருந்து நியூயார்க்கிற்கு செல்லும் விமானம் ஒன்றுக்கு 8,800 இறந்த பன்றிகளின் கொழுப்பு தேவைப்படும் என தகவல் வௌியிடப்பட்டுள்ளது.