.webp)
Colombo (News 1st) சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால், 16 வயது மகளை வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் ஒப்படைத்த தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரான தந்தை இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் சிறுமிக்கு 15 வயதாக இருந்த போது, தனது தந்தை மூலம் சூதாட்டத்திற்கு பணம் வழங்கியவரிடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசியொன்றை வழங்கியுள்ளதுடன், அதனை சிறுமியின் தாய் கண்டுபிடித்த நிலையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சிறுமியால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைவாக, அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 31 வயதான அவரது மாமாவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு பணம் கொடுத்தவரும் பொலிஸில் ஆஜராகியுள்ளார்.