.webp)
Colombo (News 1st) நேற்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
மோட்டார் சைக்கிள்களுக்கான 7 லீட்டர் எரிபொருள் கோட்டா 14 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான 15 லீட்டர் எரிபொருள் கோட்டா 22 லீட்டராக வழங்கப்படவுள்ளது.
ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான 8 லீட்டர் எரிபொருள் கோட்டா 14 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
30 லீட்டராக காணப்பட்ட கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேன்களுக்கான 30 லீட்டர் எரிபொருள் கோட்டா 40 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
75 லீட்டராக காணப்பட்ட பஸ் மற்றும் லொறிகளுக்கான எரிபொருள் கோட்டா 125 லீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.