பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு - சீனா

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவிப்பு

by Staff Writer 31-05-2023 | 11:43 AM

Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் Sun Weidong தெரிவித்துள்ளார்.

நேற்று(30)  ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக அவர் இதன்போது கூறினார்.

இலங்கையின் நெருக்கடியான காலகட்டத்தில் சீனா, இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.