இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்

இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்

இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2023 | 9:38 pm

Colombo (News 1st) இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை 385 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாக அமைந்துள்ளது.

மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் புதிய விலை 245 ரூபாவாகும்.

இலங்கை தொழில்நுட்ப மண்ணெண்ணெயின் விலையும் 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 270 ரூபாவென மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்