English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
30 May, 2023 | 4:42 pm
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், அநுராதபுரம், கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மானிப்பாய் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் 29 வயதான ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – வெலிகண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் 33 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
கண்டி – கம்பளை, குருகேலே சந்தியில் பஸ் மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, அவர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
புத்தளம் – ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வேன் மோதியதில் 68 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 76 வயதான பெண் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்தனர்.
21 Sep, 2023 | 07:38 PM
21 Sep, 2023 | 05:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS