வடமேல் மாகாணத்தின் கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த வேண்டாம் என அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்த வேண்டாம் என அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2023 | 7:53 pm

Colombo (News 1st) வடமேல் மாகாணத்தில் சுமார் 2000 மாடுகள் தோல் கழலை நோயினால் (Lumpy Skin Disease) பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,  வடமேல் மாகாணத்தின் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது உகந்ததல்ல என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதிவாகியிருந்த தோல் கழலை நோய் வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலும் தற்போது பரவியுள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் மடலஸ்ஸ, அரக்கியாலை, தொரனகெதர, கெகுனுகொல்ல, தம்பிட்டிய பகுதிகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது.

இதனிடையே இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடமேல்  மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள பணிப்பாளர் டொக்டர் P.S.S. பெரேரா  தோல் கழலை நோய் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடைத் திணைக்களங்களில் சுமார் 35 திணைக்களங்களில் நோய் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

பரவும் வேகம்,  ஆபத்து,  ,சேதத்தை கருத்திற்கொண்டு வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்வது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

கால்நடைகளுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக வடமேல் மாகாண ஆளுநரால் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்