மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ் காலமானார்

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ் காலமானார்

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2023 | 8:11 pm

Colombo (News 1st) மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் A.லோரன்ஸ்  தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார். 

பேராதனை போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று நண்பகல் அன்னார் காலமானார்.

1952 ஆம் ஆண்டு பிறந்த அவர்  தமது ஆரம்ப கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையில் கற்றார். 

1970 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த அன்னார், கொழும்பு பல்கலைக்கழத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர்  சேவை அலுவலராக செயற்பட்ட அவர், விடிவு பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டார்.

1989 ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியில் இணைந்தவர், பிரதி தலைவராக பதவி உயர்வு பெற்றதுடன். தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தார். 

கொட்டகலை கமர்சியலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாளை முதல் வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் கொட்டகலை கமர்சியல் மயானத்தில் அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்