நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமைக்கு கவலை வௌியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை

நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமைக்கு கவலை வௌியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை

நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமைக்கு கவலை வௌியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை

எழுத்தாளர் Staff Writer

30 May, 2023 | 6:58 pm

Colombo (News 1st) சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் சரத்துகள் இலங்கையில் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை குறித்து கவலையடைவதாகவும் குறித்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு அனைத்து தகவல்களையும் யோசனைகளையும் உள்ளடக்குவதற்கான உரிமை காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

சிறுபான்மையினரின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தாத வகையில், வெறுப்படைய செய்யும் கருத்துகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்