இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இந்தியா நீட்டித்துள்ளது

இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இந்தியா நீட்டித்துள்ளது

இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை இந்தியா நீட்டித்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

30 May, 2023 | 5:08 pm

Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை நீடிப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்த கடன் வசதி கடந்த வருடம் மார்ச் மாதம் வழங்கப்பட்டது.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனிலிருந்து 576 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக பயன்படுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, மிகுதி 424 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் மேலும் ஒரு வருடத்திற்கு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்