இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகம்

இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

by Bella Dalima 30-05-2023 | 6:44 PM

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் பழங்களில் காணப்படும் உலோக பதார்த்தங்களின் அளவுகளை பரிசோதிப்பது ஜூன் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 முதல் 2022 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை விளைவிப்பதால், இறக்குமதி செய்யப்படும் பழங்களில் உலோக பதார்தங்கள் காணப்படுகின்றதா என்பதை பரிசோதிப்பதை கட்டாயமாக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.