கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் ஏலக்காய் திருட்டு

கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் 25 இலட்சம் ரூபா பெறுமதியான ஏலக்காய் திருட்டு: மூவர் கைது

by Staff Writer 29-05-2023 | 2:40 PM

Colombo (News 1st) கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து அதிலிருந்த 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட ஏலக்காய் தொகையின் பெறுமதி 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பலோகம மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 39 வயதுக்குட்பட்ட மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட ஏலக்காய் தொகை வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று(29) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.