.webp)
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு பிரிவினால்(CID) கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று(29) பிற்பகல் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வௌியிட்டதாக கூறப்பட்டு, ராஜாங்கனை சத்தா ரத்தன தேரர் கைது செய்யப்பட்டார்.