.webp)
Colombo (News 1st) அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 3 குழுக்களினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் நால்வரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலப்பிட்டிய ரன்தொம்பே பகுதியில் நேற்று முன்தினம்(26) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் காயமடைந்தார்.
44 வயதான பிரதி அதிபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.