யாழ்.பருத்தித்துறையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்.பருத்தித்துறையில் ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 28-05-2023 | 5:07 PM

Colombo (News 1st) யாழ்.பருத்தித்துறை மூன்றாம் குறுக்கு தெருவிலிருந்து இன்று(28) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

பருத்தித்துறை மூன்றாம் குறுக்கு தெருவில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை பொலிஸார் சடலத்தை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இரண்டாம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 33 வயதான ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதவான் ந.சுஜீவன் சம்பவ இடத்திற்கு சென்று சடலம் மீதான விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.