இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நீந்தி வந்த மதுஷிகன்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நீந்தி வந்த மதுஷிகன்

எழுத்தாளர் Staff Writer

28 May, 2023 | 6:34 pm

Colombo (News 1st) இராமேஸ்வரம் – தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாக்குநீரிணை ஊடாக இலங்கை சாரணர் ஒருவர் நீந்தி வந்துள்ளார்.

SEA OF SRILANKA எனப்படும் எமது கடல் மாசுபடுவதனை தடுக்கும் விழிப்புணர்வு நோக்குடன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் அணியைச் சேர்ந்த ஜனாதிபதி சாரணர் தேவேந்திரன் மதுஷிகன் பாக்குநீரிணை ஊடாக தலைமன்னாரை வந்தடைந்துள்ளார்.

படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்ற 21 வயதான இவர் அதிகாலை 2.05 க்கு ஆரம்பித்த தனது நீச்சல் பயணத்தை பிற்பகல் 2.48 அளவில் தலைமன்னாரில் நிறைவு செய்தார்.

சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தினை 12 மணித்தியாலங்கள் 53 நிமிடங்கள் 45 செக்கன்களில் கடந்துள்ளார்.

தலைமன்னாரில் மதுஷிகனை வரவேற்பதற்காக பாடசாலை சமூகத்தினர், அரசாங்க அதிகாரிகள், சாரணர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கூடியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்