200 மணித்தியாலங்கள் போராடி உயிர் நீத்த வீரர்

200 மணித்தியாலங்கள் போராடி உயிர் நீத்த உக்ரைன் வீரர்

by Chandrasekaram Chandravadani 25-05-2023 | 10:39 AM

Colombo (News 1st) Maksym என்ற உக்ரைன் நாட்டின் வீரர் எந்தவொரு ஓய்வும் இன்றி 200 மணித்தியாலங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

200 மணித்தியால போராட்டத்தின் பின்னர் குறித்த வீரர் Bakhumat நகரில் ரஷ்யாவின் Sniper தாக்குதலில் பலியாகியுள்ளார்.

8 நாட்களாக உணவின்றி, உறக்கமின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கொல்லப்பட்ட வீரரின் தாய் தெரிவித்துள்ளார்.

Sniper தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் 5 நிமிடங்களுக்கு கூட அவர் கண்களை மூடியதில்லை என வீரரின் தாய் கூறியுள்ளார்.

ஒரு மகனை இழந்த அந்த தாயின் மற்றொரு மகன் இதன்போது பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைனை கடந்த வருடம் ரஷ்யா ஆக்கிரமித்த போது 22 வயதான Maksym மற்றும் 18 வயதான Ivan ஆகியோரும் போராட்டத்திற்கான தொண்டர் பணியில் இணைந்துள்ளனர்.

அவர் எப்பொழுதும் என்னுடனே இருந்தார், நான் அவருடன் இருந்தேன், என்னை பொறுத்த வரையில் அவர் தான் மிகவும் அன்பானவர் என போரில் கொல்லப்பட்ட வீரரின் இளைய சகோதரனான Ivan தெரிவித்துள்ளார்.

இறுதி நிமிடங்களிலும் சகோதரனும் தானும் ஒன்றாகவே இருந்ததாக Ivan கூறியுள்ளார்.

போரில் காயமடைந்த தனக்கு சகோதரன் Maksym முதலுதவி அளித்ததாக Ivan தனது வலிமிக்க நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

தனது சகோதரன் தன் உயிரை பிரியவிடாது காப்பாற்றியதாகவும் Ivan தெரிவித்துள்ளார். 

Ivan காயமடைந்து சரியாக ஒரு வாரத்தின் பின்னர் ரஷ்யாவின் Sniper தாக்குதலில் Maksym கொல்லப்பட்டார்.

 

சகோதரர்களான Maksym (இடது) மற்றும் Ivan (வலது)