.webp)
Colombo (News 1st) சவோனா சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இலங்கையின் யுபுன் அபேகோன் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
இந்த போட்டி இத்தாலியின் சவோனோவில் நடைபெற்றுள்ளது.
போட்டியை அவர் 10.01 செக்கன்களில் பூர்த்தி செய்துள்ளதை அடுத்து, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
9.94 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த பிரித்தானியாவின் ரீஸ் பிரெஸ்கோட்(Reece Prescod) முதலிடத்தை பெற்றுள்ளார்.