English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
24 May, 2023 | 3:31 pm
Colombo (News 1st) COVID பெருந்தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த கூட்டத்தில், அதன் தலைவர் Tedros Adhanom Ghebreyesus இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.
COVID பெருந்தொற்றை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
COVID பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை உயிரிழந்துள்ளனர். COVID பெருந்தொற்று இனி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார ஸ்தாபம் அறிவித்துள்ளது.
எனினும், அந்த பெருந்தொற்று மறைந்துவிடவில்லை. தொலைவில் இருக்கிறது. புதிய பெருந்தொற்று COVID பெருந்தொற்றை விட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
''COVID தொற்று ஆரம்பித்த போது, அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கவில்லை. அதன் காரணமாக அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. புதிய தொற்றுநோயும் வீழ்த்தக் கூடியதாக இருக்காது. அது நமது கதவை தட்டப் போகிறது. நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டால் அது நடக்கும். இப்போதே நாம் செய்யாவிட்டால், பிறகு எப்போது?"
என்று உலக சுகாதார ஸ்தாபத்தின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Sep, 2023 | 04:35 PM
19 Sep, 2023 | 04:39 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS