புதிய வசதியை அறிமுகம் செய்யும் WhatsApp

புதிய வசதியை அறிமுகம் செய்யும் WhatsApp

by Chandrasekaram Chandravadani 24-05-2023 | 9:42 AM

Colombo (News 1st) பயனாளர்கள் தாங்கள் அனுப்பிய செய்திகளை திருத்திக்கொள்ளும் வசதியை WhatsApp அறிமுகம் செய்யவுள்ளது. 

தாம் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் திருத்திக்கொள்ளும் வசதியை பயனாளர்களுக்கு WhatsApp வழங்கவுள்ளது. 

 இந்த புதிய வசதி எதிர்வரும் வாரங்களில் 2 பில்லியன் WhatsApp பயனாளர்களுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மாத்திரம் 487 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட செய்தியை Long Press செய்யும் போது தோன்றும் Edit மூலம் திருத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.