கடமைகளை ஆரம்பித்தார் கிரிக்கெட் நிறுவன தலைவர்

கடமைகளை ஆரம்பித்தார் கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா

by Staff Writer 22-05-2023 | 7:45 PM

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று(22) தனது கடமைகளை ஆரம்பித்தார்.

2023 தொடக்கம் 2025 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 

முன்னாள் தலைவர் ஷம்மி சில்வாவின் தரப்பினர் மாத்திரம் கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தமையால் தலைவர் உள்ளிட்ட பதவிக்கு அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். 

அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று(22) நடைபெற்ற நிகழ்வினையடுத்து ஷம்மி சில்வா மீண்டும் தலைவருக்கான பொறுப்புகளை ஆரம்பித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா, பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, பொருளாளர் சஜீவ கொடலியத்த, உப தலைவர்களான ஜயந்த தர்மதாச மற்றும் ரவீன் விக்ரமரத்ன உள்ளிட்ட கிரிக்கெட் நிறுவன ஊழியர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.