The Voice Sri Lanka மகுடத்தை சூடினார் ரமீஷ் சஷிங்க

The Voice Sri Lanka மகுடத்தை சூடினார் ரமீஷ் சஷிங்க

by Staff Writer 21-05-2023 | 2:38 PM

Colombo (News 1st) இலங்கையின் பாடகர்களை சர்வதேச அரங்கிற்கு உயர்த்தும் The Voice Sri Lanka 2023 இன் மாபெரும் இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டைய்ன் கலையகத்தில் நேற்றிரவு(20) நடைபெற்றது.

இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் ரமீஷ் சஷிங்க The Voice மகுடத்தைச் சூடினார்.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் ரியாலிட்டி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய சிரச TV மீண்டும் அந்த அனுபவத்தைப் புதுப்பித்தது.

கோச் உமாரியா சிங்ஹவங்ச அணியில் ஷெஹான் ரங்கனவும்

கோச் ஷஷிகாவின் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஷெரோன் சில்வாவும்

கோச் B AND S அணியில் சிந்தக ரொஷானும்

கோச் கசுன் அணியில் ச்சனுப தேஷதத்

கோச் சுபுனின் அணியில் ரமீஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.