கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2023 | 5:26 pm

Karnataka: கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக  D.K.சிவகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர்.  

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.  

இதையடுத்து, முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில், கட்சித் தலைவர்களின் நீண்ட ஆலோசனைக்கு பின்னர் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.  

பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (20) பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றுக் கொண்டார். 

ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

தொடர்ந்து துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும், 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

இந்நிகழ்வில்  காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சரும்  தி.மு.க தலைவருமான  மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்