.webp)
Colombo (News 1st) சிறுபோகத்தை முன்னிட்டு 50 கிலோகிராம் எடையுள்ள Bandi உர மூடையின் விலை 15,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து விவசாய சேவை மத்திய நிலையங்களின் ஊடாக இந்த விலைக்கு உரத்தை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணய குழு வழங்கிய அனுமதிக்கமைய, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.