இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது

by Staff Writer 16-05-2023 | 6:20 PM

Colombo (News 1st) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி இன்று (16) வௌியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 318 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது. 

அத்துடன், டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 305 ரூபா 43 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.