கின்னஸ் உலக சாதனை படைத்த திருமண ஆடை

50,000-க்கும் மேற்பட்ட படிகங்களுடனான திருமண ஆடை கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது

by Bella Dalima 12-05-2023 | 4:53 PM

Colombo (News 1st) சுமார் 50,890 படிகங்களால் உருவாக்கப்பட்ட மிக வசீகரமான திருமண ஆடை ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 

நான்கு மாத திட்டமிடலுக்குப் பிறகு, ஏப்ரல் 14, 2023 அன்று மிலனில் நடைபெற்ற Sì Sposaitalia Collezioni பேஷன் ஷோவில் இந்த ஆடை வெளியிடப்பட்டது.

இந்த ஆடை ஆடம்பர மணப்பெண் பேஷன் பிராண்டான  Michela Ferriero-வால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஸ்வரோவ்ஸ்கி படிகங்களை (Swarovski crystals) அவர்கள் இந்த திருமண ஆடையில் பயன்படுத்தியுள்ளனர். 

வடிவமைப்பாளர்கள் குழு இந்த தைக்கப்பட்ட திருமண ஆடையில் ஸ்வரோவ்ஸ்கி படிகங்களைப் பொருத்த சுமார் 200 மணி நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்.  

கின்னஸ் உலக சாதனை வழிகாட்டுதல்களின்படி, பதிவு முயற்சிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து படிகங்களும் உண்மையானதாகவும் வணிக ரீதியாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான சான்றிதழும் இருக்க வேண்டும். 

இந்த நேர்த்தியான திருமண ஆடை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதற்கு முன்பு இஸ்தான்புல்லில் 45,000 படிகங்களுடன் ஒரு ஆடையை துருக்கியை சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்து இருந்தது. 

தற்போது இந்த ஆடை, பழைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.