சீனி, கோதுமை மா விலைகள் அதிகரிப்பு

சீனி, கோதுமை மா விலைகள் அதிகரிப்பு

by Staff Writer 08-05-2023 | 2:15 PM

Colombo (News 1st) சீனி மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் சீனியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் சீனி 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதுடன், விலை அதிகரிப்பிற்கு அமைய ஒரு கிலோகிராம் சீனி 250 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சீனி இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிஹால் செனவிரத்ன கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவிற்கான மொத்த விற்பனை விலை 210 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டிருந்த 3 ரூபா வரிச்சலுகை நீக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும்.