கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழத்தை உண்ட மாணவன்

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வாழைப்பழத்தை உட்கொண்ட மாணவன்

by Chandrasekaram Chandravadani 02-05-2023 | 9:26 AM

Colombo (News 1st) சியோல் நகரின் Leeum Museum of Art அருங்காட்சியகத்தில் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த வாழைப்பழத்தை தென் கொரிய கலைத்துறை மாணவரொருவன் உட்கொண்டுள்ளார்.

காலை உணவை தவிர்த்த காரணத்தினால் பசி ஏற்பட்டதனால் குறித்த வாழைப்பழத்தை உட்கொண்டதாக அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

'Comedian' ​என அ​ழைக்கப்படும் குறித்த கலைப்படைப்பின் ஒரு பகுதியான கண்காட்சியில் Maurizio Cattelan என்ற கலைஞரால் வைக்கப்பட்டிருந்த வாழைப்பழமே இவ்வாறு உட்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைப்பழத்தை உட்கொண்டதன் பின்னர் தோலை சுவரில் ஒட்டவைத்துள்ளார் Noh Huyn Soo என்ற அந்த மாணவன்.

பின்னர் Leeum Museum of Art அருங்காட்சியத்தினால் வேறொரு வாழைப்பழம் வைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.

Noh Huyn Soo வாழைப்பழத்தை உட்கொண்ட காட்சியை அவரது நண்பன் வீடியோவாக பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவனிடம் நஷ்ட ஈடு கோரப்போவதில்லை என அந்த அருங்காட்சியகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு காட்சிக்கு வைக்கப்படும் வாழைப்பழம் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு தடவை மாற்றப்படும் என கூறப்படுகின்றது.

2019ஆம் ஆண்டில் புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரில்  நடத்தப்பட்ட கலை கண்காட்சியொன்றில் வைக்கப்பட்டிருந்த வாழைப்பழமொன்று கலைஞரொருவாரால் உட்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த வாழைப்பழம் 120,000 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த பின்னர் உட்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.