பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம்

கொழும்பின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

by Chandrasekaram Chandravadani 09-04-2023 | 6:21 PM

Colombo (News 1st) கொழும்பின் பல பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

சில உயரமான பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படலாம் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.